search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடை காரணமாக நெல்லையப்பர் கோவில் வாசல் முன்பு இன்று தரிசனம் செய்த  பக்தர்கள்.
    X
    கொரோனா தடை காரணமாக நெல்லையப்பர் கோவில் வாசல் முன்பு இன்று தரிசனம் செய்த பக்தர்கள்.

    கோவில் வாசல் முன்பு நின்று பக்தர்கள் தரிசனம்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களின் வாசல் முன்பு நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லை:

    தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

    விடுமுறை நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமையையொட்டி வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.  இதனால்  நெல்லையப்பர் கோவில், சந்திப்பு சாலை குமாரசுவாமி கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில்  உள்ளிட்ட கோவில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    இந்த கோவில்களின் வாசல் முன்பு நின்று பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். எனினும் கோவில்களில் நடை வழக்கம் போல் திறந்து இருந்தது. பூசாரிகளும் வழக்கம்போல் தினசரி பூஜைகளை செய்தனர்.

    இதனால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படும் இந்த கோவில்களில் வெறிச்சோடி காணப்பட்டது. 

    வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார் கள்.  ஆனால் கொரோனா தடை காரணமாக இன்று சிறப்பு தொழுகைகள் நடை பெறவில்லை.

    நெல்லை, மேலப்பாளையம், டவுன், பேட்டை, ஏர்வாடி, கடையநல்லூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இன்று மசூதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர்.
    Next Story
    ×