என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நல்லூர் கோவில் குளத்தின் தற்போதைய நிலை.
  X
  நல்லூர் கோவில் குளத்தின் தற்போதைய நிலை.

  கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளம் தூர்வாரப்படுமா- பக்தர்கள் எதிர்பார்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாபநாசம் அருகே நல்லூர் கிராமத்தில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளம் தூர்வாரப்படுமா- என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
  பாபநாசம்:

  பாபநாசம் அருகிலுள்ள நல்லூர் கிராமத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இது 7-ம் நூற்றாண்டு காலத்தில் செங்கோட்சோழனால் கட்டப்பட்டது. 

  மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளைப் பெற்ற இத்தலத்தை பற்றி திருநாவுக்கரசர், சேக்கிழார் ஆகியோர் பாடியுள்ளனர்.

  இக்கோவிலின் குளம் 7 கடல்களின் நீரும் சங்கமிக்கும் புண்ணிய 
  தீர்த்தமாக குந்தி தேவியின் பாவங்களைப் போக்குவதற்கு 
  சிவபெருமானால் உண்டாக்கப்பட்ட சப்த சாகரம் என்ற புராண சிறப்புடையது. 

  சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 4 பக்கமும், 12 படித்துறைகளை கொண்டு 
  ஒரு ராசிக்கு ஒரு படித்துறை வீதம் 12 ராசிகளுக்கும் 12 வருடத்திற்கு உரியது.பெருமைக்குரிய மகம் நட்சத்திரம் பிறந்தது இந்த 
  நல்லூரில் தான்.

  மகாமகம் பிறந்தது கும்பகோணம். மகம் நட்சத்திரக்காரர்கள் ஒவ்வொரு மாதமும் இங்கு நீராட வேண்டிய புண்ணிய தீர்த்தம் ஆகும். 

  மேலும் மாசிமக விழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த 
  கோவிலுக்கு வந்து புனித நீராடுவது வழக்கம்.

  இவ்வளவு பெருமைக் குரிய இந்த கோவில் குளத்தின் படித்துறைகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. 

  கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்று கோவிலாகும். 

  வருகிற பிப்ரவரி மாதம் 8-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மாசிமக 
  பெருவிழா 10-நாள் நடைபெறுகிறது.

  இந்த புனிதமான குளத்தை முழுமையாக தூர்வாரி சுத்தமான தண்ணீர் நிரப்ப வேண்டும்.குளத்தை சுற்றி நான்கு பக்கமும் சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். 

  மின்விளக்கு வசதி செய்து தரவேண்டும். குளியலறை, கழிவறை வசதி, 
  குடிநீர் வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் 
  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று 
  பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  Next Story
  ×