search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நஞ்சை தரிசில் உளுந்து பயிரிட்டு அதிக வருமானம் பெறலாம்

    நஞ்சை தரிசில் உளுந்து பயிரிட்டு அதிக வருமானம் பெறலாம் என விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பூதலூர் வட்டார விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி அறுவடைக்கு பின்னர் நெல் தரிசில் உளுந்து பயிரிடுவதன் மூலம் குறைந்த செலவில் அதிக வருமானம் பெறுவதுடன், மண் வளத்தையும் காத்திடலாம். 

    நம் நாட்டில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பயறு வகைகள் 
    14 சதவீதம் அளவிற்கு வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி 
    செய்யப்படுகிறது. 

    பயிர் வகை பயிர்கள் சாகுபடி செய்யும்போது வளிமண்டல தழைச்சத்தை வேர் முடிச்சுகளில் கிரிகிக்கப்படுகிறது. மேலும் பயிர் வகை பயிர்களின் வேர்கள் பாஸ்பரசை கிரகித்து பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் மாற்றுகிறது. 

    பயிறு வகைகளின் இலைகள் வயலில் கொட்டி தழை உரமாக மாறுகிறது. இதனால் ரசாயன உரங்களின்ற பயன்பாடு குறைவதால் பசுமைக்குடில் வாயுக்கள் குறைக்கப்பட்டு சுற்றுச்சூழல் மேம்படுகிறது.

    மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு திறனை அதிகரித்து மண் அரிமானத்தை குறைக்கிறது. நெல் தரிசில் வயல் ஈரப்பதம் மற்றும் மண்ணில் உள்ள ஊட்டச் சத்துக்கள் மூலம் சாகுபடி மேற்கொள்வதால் குறைந்த செலவில் அதிக வருமானம் பெறலாம்.

    பயிறுவகை பயிர்களை தைப்பட்டம் அதாவது ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15&க்குள் சாகுபடி செய்யலாம். விவசாயிகள் நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×