search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் கழிவுகள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்ட காட்சி.
    X
    பிளாஸ்டிக் கழிவுகள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்ட காட்சி.

    பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

    பல்லடத்தில் தினமும் 15 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் கழிவுகள்,மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் தனியாக பிரித்து எடுக்கப்படுகின்றன.
    பல்லடம்:
      
    பல்லடம் நகராட்சி பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விசைத்தறி, பனியன், கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்றுவருவதால் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது.

    இதனால், பல்லடத்தில் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை அப்புறப்படுத்துவது நகராட்சி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாகும். இந்த நிலையில் பல்லடத்தில் தினமும்15 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் கழிவுகள்,மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் தனியாக பிரித்து எடுக்கப்படுகின்றன. 

    அப்படி பிரிக்கப்பட்டு தனியே சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை, நவீன எந்திரம் மூலம் அழுத்தம் கொடுத்து பண்டல்களாக மாற்றி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் சேகரிக்கப்பட்ட 6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூர் சிமெண்ட் தயாரிப்பு ஆலைக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டது. இதனை நகராட்சி ஆணையாளர் விநாயகம், சுகாதார ஆணையாளர் சங்கர் நேரில் பார்வையிட்டனர்.
    Next Story
    ×