என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிறப்பு அலஙக்ரத்தில் ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபா.
  X
  சிறப்பு அலஙக்ரத்தில் ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபா.

  பரமத்திவேலூர் அருகே சாய்பாபா கோவிலில் வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்திவேலூர் அருகே சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வீரணம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

  இதை முன்னிட்டு ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபாவுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் ,தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

  அதனைத் தொடர்ந்து காய்கனி அலங்காரம் செய்யப்பட்டது .பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


  இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சீரடி முக்கண் சாய் பாபாவை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
  Next Story
  ×