என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தங்க மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்த காட்சி
  X
  தங்க மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்த காட்சி

  பழனி தைப்பூசம் திருவிழா இன்று நிறைவடைகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனி தைப்பூச திருவிழா இன்று தெப்ப உற்சவத்துடன் நிறைவடைகிறது
  பழனி:

  பழனியில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்திருவிழா கடந்த 12&ந் தேதி கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  10 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் நாள்தோறும் சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி மயில், தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் 4 ரத வீதிகளிலும் உலா வருவதற்கு பதிலாக கோவில் உட்பிரகாரத்திலேயே எழுந்தருளினார்.

  கடந்த 17&ந் தேதி வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடந்தது. 18&ந் தேதி மாலையில் சிறு தேரில் சுவாமி கோவில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.

  பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற திருவிழாவின் 9ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட சுவாமி தரிசனம் செய்தனர்.

  மேலும் மலைக்கோவில் அடிவாரத்தில் காவடிகளு டன் கூடிய திரளான பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கலந்து கொண்டு பழனி முருகனை வழிபட்டனர்.

  விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இரவு 11 மணியளவில் கொடி இறக்கத்துடன் தைப்பூச உற்சவம் நிறைவுபெறுகிறது.

  தமிழக அரசு உத்தரவின்படி இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை கோவில்கள் அடைக்கப்படும் என்பதால் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று பக்தர்கள் நடமாட்டமின்றி கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில பக்தர்கள் அடிவாரத்தில் நின்று வழிபட்டு செய்து சென்றனர்.
  Next Story
  ×