என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  கல்லூரி மாணவி உள்பட 5 பெண்கள் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 5 பெண்கள் ஒரே நாளில் மாயமானதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
  தேனி:

  சின்னமனூர் அருகே குச்சனூரை சேர்ந்தவர் சசி மகள் ராஜபிரியா (வயது20).  இவர் வீரபாண்டியில் உள்ள கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கணினி வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற ராஜபிரியா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

  உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

  பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் மனைவி சவுந்தர்யா (26). இவர்களுக்கு மணிஷாஸ்ரீ (8), சிவனாஸ்ரீ ஆகிய 2 மகள்கள் உள்ளனர். வீட்டில் இருந்த அவர்கள் திடீரென மாயமாகினர். இது குறித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் 2 மகள்களை தேடி வருகின்றனர்.

  கூடலூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகள் ஜெசிபிலோமினாள் (27). இவருக்கு 24&ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தேனியில் உள்ள தனது தோழிக்கு பத்திரிகை கொடுத்து விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியாததால் கூடலூர் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் -வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×