என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைதான முனியாண்டி
  X
  கைதான முனியாண்டி

  மனைவியை கொன்று நாடகமாடிய தொழிலாளி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிலக்கோட்டை அருகே மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்
  நிலக்கோட்டை:

  நிலக்கோட்டை அருகே என்.ஆண்டிபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது48). இவருடைய மனைவி வீருசின்னம்மாள் (37). இவர்கள் 2 குழந்தைகளுடன் தனியார் தோட்டத்தில் விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர்.

  சம்பவத்தன்று வீரு சின்னம் மாள் மோட்டார் அறையில் தூக்கில் தொங்கினர். குடும்ப தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கணவர் முனியாண்டி போலீசாரிடம் கூறி உள்ளார்.

  இருந்தபோதும் அவரது நடவடிக்கையில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். மேலும் பிரேத பரிசோதனையில் கொலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து முனியாண்டியிடம் போலீசார் கிடுக்கிபிடி விசார ணை நடத்தினர். அதில் அவர் நடத்தை சந்தேகத்தால் தனது மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
  -
  இது குறித்து போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
  குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் வீருசின்னம்மாள் கோபித்துக் கொண்டு தனது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார்.
  -
  சம்பவத்தன்று மீண்டும் வீட்டுக்கு வந்தபோது தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்து கம்பால் தாக்கினேன். மேலும் மின் வயரால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். மற்றவர்களை நம்ப வைக்க சேலையில் தூக்கிட்டதுபோல் நாடகம் ஆடினேன்.

  ஆனால் போலீசார் சந்தேகம் அடைந்து விசாரித்ததால் உண்மை வெளி வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
  Next Story
  ×