search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது

    27-ந்தேதி காலை 7:35 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, நிறை வேள்வி நடக்கிறது.
    உடுமலை:

    உடுமலையில் நூற்றாண்டு பழமையான பிரசித்தி பெற்ற, ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு புதிய சன்னதி, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுரம், ராஜகோபுரம் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து வருகிற 27-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இங்கு ஸ்ரீ மாரியம்மன் பஞ்ச ஆசன வேதிகை மற்றும் 9 குண்டம், விநாயகப்பெருமான், செல்வ முத்துக்குமாரசுவாமி, அஷ்ட நாகர், கொடிமரம், பலி பீடம் ஆகியவற்றுக்கு தலா ஒரு வேதிகை, ஒரு குண்டம் என 13 குண்டங்கள், 5 வேதிகைகளுடன் அற்புதமாக யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக விழா வருகிற 23-ந்தேதி காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. தொடர்ந்து சர்வ தேவதா அனுமதி, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மாலை 6:15 மணிக்கு வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 27-ந்தேதி காலை 7:35 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, நிறை வேள்வி நடக்கிறது. 9:30மணிக்கு யாத்ரா ஹோமம், கடம்புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

    10 மணிக்கு  மாரியம்மன், சக்திவிநாயகர், செல்வமுத்துக்குமரன், உற்சவர் சன்னதி மற்றும் மூலவர் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 10:30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    மாலை, 4:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும், திருவீதி உலாவும் நடக்கிறது.கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×