search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம் நடத்திய பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    போராட்டம் நடத்திய பொதுமக்களை படத்தில் காணலாம்.

    நாகர்கோவில் அருகே அதிவேகமாக செல்லும் லாரிகளை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டம்

    நாகர்கோவில் அருகே அதிவேகமாக செல்லும் லாரிகளை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
    நாகர்கோவில்:

    சித்திரங்கோடு பகுதியிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் பாறையிலிருந்து உடைக்கப்பட்ட ஜல்லிகள் பாறை மணல் மற்றும் கற்கள் கேரளாவிற்கும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது அரசு அனுமதித்துள்ள எடையை விட அதிக அளவிலான எடையுடன் வேர்கிளம்பி, கண்ணனூர் உள்ளிட்ட பகுதி வழியாக இந்த லாரிகள் அதிவேகமாகச் செல்கின்றனர்.

    இதனால் அவ்வழியாக செல்லும் ஏனைய வாகனங்கள் சாலையோரம் செல்லும் பாதசாரிகள் முதல் சாலையோரம் குடியிருக்கும் பொதுமக்கள் உட்பட அனைவரும் அச்சத்தோடு காணப்படும் நிலை உள்ளது.

    அதிக பாரத்தை ஏற்றி செல்வதை கட்டுப்படுத்தவும், அதிக விபத்துகள் நடை பெறுவதை தடுக்கவும், அதி வேகமாக செல்வதை தடை செய்யவும் அதிகாரிகளிடம் கண்ணனூர் பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகா ரிகள் தரப்பில் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த கண்ணனூர் பகுதி மக்கள் திடீரென சாலையில் அமர்ந்து அவ்வழியாக கற்கள் ஏற்றிச்சென்ற சம்பந்தப்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக லாரிகள் சிறைபிடிக்கப்பட்டு இருந்ததால் அவ்வழியாக ஏனைய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருவட்டார் சப் இன்ஸ் பெக்டர் ராஜாங்க பெருமாள் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் தினமும் செல்லும் வாகனத்தை கட்டுப்படுத்த வருவாய் துறை போக்குவரத்துதுறை மூலம் முறைபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு பொதுமக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை அப்பகுதி மக்கள் கைவிட்டனர் அதன் பின்னரே அந்த சாலையில் போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது.

    Next Story
    ×