என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  நாசரேத்தில் முதியவரை தாக்கிய 2 அ.தி.மு.க. பிரமுகர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாசரேத்தில் முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கிய 2 அ.தி.மு.க. பிரமுகர்களை போலீசார் கைது செய்தனர்.
  நாசரேத்:

  நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் 6&வது தெருவை சேர்ந்தவர் கமலசேகர் (வயது 72).

  இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராம்கோபாலன் (51) என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. 

  இந்நிலையில் நேற்று முன்தினம் கமலசேகர் நாசரேத்தில் ஒரு டீக்கடை யில் டீ குடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த ராம் கோபாலனுக்கும், கமலசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

  இதில் ஆத்திரமடைந்த ராம்கோபாலன், அவரது நண்பர் சாது இம்மானுவேல்(31) ஆகிய 2 பேரும் கமலசேகரை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. 

  இதுகுறித்து கமலசேகர் நாசரேத் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்& இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். 

  தொடர்ந்து கமலசேகரை தாக்கியதாக ராம்கோபாலன்,  சாது இம்மானுவேல் ஆகிய 2 பேரை கைது செய்தார். 

  கைதான ராம்கோபாலன் ஆழ்வார்திருநகரி ஒன்றிய அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். சாது இம்மானுவேலும் அ.தி.மு.க. பிரமுகர் ஆவார்.

  Next Story
  ×