search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குறுந்தகவல்
    X
    குறுந்தகவல்

    விளாத்திகுளத்தில் இறந்தவர் செல்போனுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக குறுந்தகவல்

    விளாத்திகுளத்தை சேர்ந்த ஒருவர் கடந்த மே மாதம் 20-ந்தேதி கொரோனா காரணமாக உயிரிழந்தார். ஆனால் நேற்று முன்தினம் அவர் செல்போனுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த வில்வமரத்துப்பட்டியை சேர்ந்த ராஜப்பா(வயது 72). 

    இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருந்த நிலையில், மே மாதம் 20-ந்தேதி கொரோனா காரணமாக இவர் உயிரிழந்தார். 

    இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது செல்போனுக்கு, அவர் கொரோனா தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொண்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

    இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த குழப்பம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். 

    மேலும், கணினியில் பதிவேற்றம் செய்யும்போது கூட வேறு பெயர் தவறுதலாக பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்றனர்.
    Next Story
    ×