search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர்கள்
    X
    முதியவர்கள்

    ரெயில் கட்டண சலுகை கிடைக்காததால் முதியவர்கள் ஏமாற்றம்

    ரெயில் கட்டண சலுகை கிடைக்காமல் முதியவர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
    ராமநாதபுரம்

    கீழக்கரை இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தாளாளரும், வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும்,   ரெயில் பயண கட்டணத் தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை இதுவரை வழங்கப்படாத நிலை உள்ளது.  இது தொடர்பாக இன்னும் எந்த முடிவும். எடுக்கப்படாமல் இருப்பது மூத்த குடிமக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

    ஆகவே மத்திய அரசு ஏற்கனவே இருந்தபடி மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை பயணத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    Next Story
    ×