search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி முகாம்

    கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் பொது மக்களின் வசதிக்காக அனைத்து நாட்களிலும் அரசு கூடுதல் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை போடப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரியில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

    மேலும் அனைத்து துணை சுகாதார மையங்களுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசிபோடும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது . 

    கன்னியாகுமரி மாவட் டத்தில் நேற்று (19.01.2022) முதல் கட்ட தடுப்பு மருந்து 357 நபர்களுக்கும், இரண்டாம் கட்ட தடுப்பு மருந்து 1115 நபர்களுக்கும் செலுத்தப்பட்டது. மொத்தம் இதுவரை நீரழிவு நோய், இணைநோய் உள்ளவர்கள் 71,086 நபர்களுக்கும், கர்ப்பிணி பெண்கள் 18,792 நபர்களுக்கும், பாலுட்டும் பெண்கள் 18,274 நபர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது . மொத்தமாக இதுவரை முதல் கட்ட தடுப்பு மருந்து 11,94,262 நபர்களுக்கும் , இரண்டாம் கட்ட தடுப்புமருந்து 9,14,574 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 475 பள்ளிகளில் தகுதியுடைய 15-18 வயதுடைய பள்ளி மாணவ / மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிதுவங்கியது . இதில் மொத்தம் 74,165 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் இதில் இதுவரை மொத்தம் 71,872 பள்ளி மாணவ / மாணவிகளுக்கு கோவாக் சின் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டு உள்ளது

    தற்போது குமரி மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இரண்டாவது தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்றுவரை 2300 பேருக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்று பூஸ்டர் தடுப்பூசி 22 மையங்களில் பொதுமக்கக்கு செலுத்தப்பட்டது. நாகர்கோவில் மாநகர பகுதியில் வடிவீஸ்வரம் வட்டவிளை வடசேரி தொல்லவிளை கிருஷ்ணன் கோவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    பூஸ்டர்  தடுப்பூசி போட வந்தவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட அதற்கான தேதி மற்றும் பூஸ்டர் ஊசி போடுவதற்கான தேதியை உறுதி செய்த பின்னர் தடுப்பூசி செலுத்தினார்கள். சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகம் பெருமாள்புரம் யூனியன் அலுவலகம் பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகங்களில் இன்று பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.
    Next Story
    ×