என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  சேலத்தில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  சேலம்:

  சேலம் வீராணம் அருகே உள்ள தாதம்பட்டி பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தாதன். 

  இவரது மனைவி உமா (வயது 37). இந்த நிலையில் இன்று காலை உமா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்த தகவலின் பேரில் வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சேலம் வீராணம் அருகே உள்ள தாதம்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (40). மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். 

  இவருக்கு சுதா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக சுதா குழந்தைகளுடன் தனியாக பிரிந்து வசித்து வருகிறார்.

  இந்த நிலையில் இன்று காலை யுவராஜ் வீட்டில் உள்ள ஜன்னல் கம்பியில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார்.இதைக்கண்ட உறவினர்கள் வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யுவராஜ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×