என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் புகையிலை விற்ற வியாபாரி கைது
Byமாலை மலர்20 Jan 2022 10:08 AM GMT (Updated: 20 Jan 2022 10:08 AM GMT)
தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பகுதியில் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, வியாபாரியை கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப் பொருட்கள் விற்பவர்கள் உட்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் குறித்து தீவிர ரோந்துப்பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின் பேரில் புதூர் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் நேற்று புதூர் வ.உ.சி. தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (53), என்பவர் தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் சீனிவாசனை கைது செய்து அவரிடமிருந்து 1,283 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×