என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேலம் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் ஒருவருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்ட காட்சி.
  X
  சேலம் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் ஒருவருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்ட காட்சி.

  சேலம் மாவட்டத்தில் 22 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டத்தில் 22 மையங்களில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது.
  சேலம்:

  சேலம் மாவட்டத்தில் இதுவரை 15 வயதுக்கு மேற்பட்ட 25 லட்சத்து 70 ஆயிரத்து 70 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 16 லட்சத்து 68 ஆயிரத்து 534 பேருக்கு 2&ம் தவணை  கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

  மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களில் உள்ள 20 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேட்டூர் அரசு மருத்துவமனை, சேலம் மோகன் குமாரமங்கலம்  மருத்துவ கல்லூரி மருத்துவ மனை என மொத்தம் 22 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது. 

  இந்த முகாமில் இன்று காலை பொதுமக்கள் ஆர்வ முடன் வந்து முக கவசம் அணிந்தும்,சமுக இடைவெளியை கடை பிடித்தும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் 2 வது தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் முடிந்த அனைத்து சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

  மாவட்டத்தில் இந்த தடுப்பூசி செலுத்திக் கொள்ள 15 ஆயிரத்து 25 சுகாதார பணியாளர்களும், 18 ஆயிரத்து 192 முன்களப் பணியாளர்களும், 60 க்கும் மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் 24 ஆயிரத்து 807 பேர் என மொத்தம் 58 ஆயிரத்து 24 பேர் தகுதி உள்ளவர்களாக உள்ளனர்.

  இதுவரை 5 ஆயிரத்து 336 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வியாழக்கிழமை யும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது..
  Next Story
  ×