என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம் - திருப்பூரில் நாளை நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  46-வது வார்டு முதல் 60-வது வார்டு வரை எஸ்.ஆர்.நகரில் உள்ள ரத்தின விநாயகர் கோவில் மாநகராட்சி மண்டபத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
  திருப்பூர்:

  திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள அனுமதியற்ற மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற வசதியாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 

  அதன்படி நாளை 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 4 மண்டல அலுவலகங்களில் முகாம்கள் நடக்கிறது.

  1-வது வார்டு முதல் 15-வது வார்டு வரை வேலம்பாளையத்தில் உள்ள முதலாவது மண்டல அலுவலகத்திலும், 16-வது வார்டு முதல் 30-வது வார்டு வரை நஞ்சப்பா நகரில் உள்ள 2-வது மண்டல அலுவலகத்திலும், 31-வது வார்டு முதல் 45-வது வார்டு வரை நல்லூரில் உள்ள 3-வது மண்டல அலுவலகத்திலும், 46-வது வார்டு முதல் 60-வது வார்டு வரை எஸ்.ஆர்.நகரில் உள்ள ரத்தின விநாயகர் கோவில் மாநகராட்சி மண்டபத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது. 

  பத்திரம் நகல், 2016-ம் ஆண்டுக்கு முன்பு பெற்ற மூலபத்திரம் நகல், பட்டா, சிட்டா நகல், மனைப்பிரிவு வரைபடம் நகல், வில்லங்க சான்று நகல், ஆதார்கார்டு நகல் ஆகியவற்றுடன் முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×