என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வளைகாப்பு நிகழ்ச்சி
  X
  வளைகாப்பு நிகழ்ச்சி

  மாதவரம் காவல் நிலையத்தில் பெண் போலீசுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாதவரம் போலீஸ் நிலையத்தில் அரவிந்தாவிற்கு கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றது.

  கொளத்தூர்:

  சென்னை பெரம்பூர் செம்பியம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பெண் போலீஸ் அரவிந்தா (29).

  இவருக்கு தனியார் கம்பெனியில் வேலை செய்யும் சதீஷ் என்பவருடன் திருமணமாகி 8 வயதில் மோனிஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அரவிந்தா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

  தற்போது இவர் மாதவரம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை செய்து வருகிறார்.

  நேற்று இரவு இன்ஸ்பெக்டர்கள் காளிராஜ் மற்றும் ஸ்ரீஜா முன்னிலையில் மாதவரம் போலீஸ் நிலையத்தில் அரவிந்தாவிற்கு கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றது.

  இதில் 7 விதமான சமைத்த உணவு, 9 வகையான பழங்கள், வெள்ளி வளையல், பட்டுபுடவை, பிறக்க போகும் குழந்தைக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சீர்வரிசையாக வைக்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில் சக போலீசார், அரவிந்தாவின் குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×