search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு வாழைத்தாரில் உள்ள 2 பூக்கள்.
    X
    ஒரு வாழைத்தாரில் உள்ள 2 பூக்கள்.

    ஒரு வாழைத்தார் காம்பில் 2 பூக்கள்

    தஞ்சை அருகே, விவசாயி தோட்டத்தில் ஒரு வாழைத்தார் காம்பில் 2 பூக்கள் உள்ள அதிசயத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த கீழ திருப்பந்துருத்தியை சேர்ந்தவர் விவசாயி தமிழ்ச்செல்வம். இவர் வெல்லகரையில் உள்ள தனது தோட்டத்தில் 
    2 ஏக்கர் நிலப்பரப்பில் வாழை சாகுபடி செய்துள்ளார். 

    இந்த நிலையில்  தோட்டத்தில் வாழைப்பூ பறிக்க சென்றார்.

    அப்போது ஒரு மொந்தன் வாழை மரத்தாறில் 2 வாழை பூக்கள் இருப்பதை பார்த்து வியந்தார்.  பொதுவாக வாழைத்தாரில் ஒரு பூ தான் இருக்கும்.

    ஆனால் இங்கு 2 பூக்கள் இருந்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் வாழை பூக்களை பறிக்க மனமில்லாமல் அப்படியே விட்டு விட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் வாழை மரத்தில் மூத்த அதிசய 2 வாழை பூக்களை பார்த்து செல்கின்றனர்.
    Next Story
    ×