search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆந்திராவுக்கு ஆட்டோவில் கடத்திய ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்- பெண் உள்பட 2பேர் கைது

    பள்ளிப்பட்டு அருகே ஆந்திராவுக்கு ஆட்டோவில் கடத்திய ஒரு டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    திருவள்ளூர்:

    பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பள்ளிப்பட்டு பஸ் நிலையம் அருகே குடிமை பொருள் பாதுகாப்பு குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சுமார் 1 டன் எடையுள்ள ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது.

    இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா, ஷேர் ஆட்டோடிரைவர் ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ஷேர் ஆட்டோவுடன் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ராஜேஷை திருவள்ளூர் கிளை சிறையிலும், புஷ்பாவை புழல் மகளிர் ஜெயிலிலும் போலீசார் அடைத்தனர்.
    Next Story
    ×