என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மைக்கேல்பட்டியில் போலீசார் குவிப்பு
  X
  மைக்கேல்பட்டியில் போலீசார் குவிப்பு

  விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்காட்டுப்பள்ளி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து உயிரிழந்துள்ளார்.
  பூதலூர்:

  திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தவர் லாவண்யா (17).

  பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இவருடைய சொந்த 
  ஊர் அரியலூர் மாவட்டம் வடுகபாளையம். 

  பள்ளியின் விடுதி வார்டன் பல்வேறு வேலைகளை கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி லாவண்யா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.

  கடந்த 15-ம் தேதி முதல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

  லாவண்யா கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் 
  திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 
  விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை 
  மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்நிலையில் லாவண்யா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 
  உயிரிழந்தார். 

  இதையடுத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் மைக்கேல்பட்டி பள்ளி வளாக பகுதியில் போலீஸ் 
  பாதுகாப்பு போடப்பட்டது. 

  பள்ளிக்கு செல்லும் 2 பிரதான வழிகளிலும் தடுப்புகள் அமைத்து 
  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  100 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் மொத்தம் 
  679 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 

  மாணவிகளுக்கு மட்டும் விடுதி உள்ளது. விடுதியில் 51 மாணவிகள் 
  தங்கி படித்து வருகின்றனர். 

  மாணவி இறந்த தகவல் அறிந்ததும் மைக்கேல்பட்டி கிராமம் 
  சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
  Next Story
  ×