என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகள் - பொதுமக்கள் அச்சம்
Byமாலை மலர்20 Jan 2022 8:59 AM GMT (Updated: 20 Jan 2022 8:59 AM GMT)
உடுமலை கண்ணாடிபுத்தூர் சிவன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் முதலைகள் உலா வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் ஏராளமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது பாசனத்திற்காக அமராவதி அணையில் இருந்து ஆறு மற்றும் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் அணையில் வசித்து வருகின்ற முதலைகள் மதகுகள் வழியாக ஆற்றுக்குள் வந்து விடுகின்றன.
தற்போது உடுமலை கண்ணாடிபுத்தூர் சிவன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் முதலைகள் உலா வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமராவதி ஆற்றில் மடத்துக்குளம் பேரூராட்சி குடிநீர் நீர் உந்து நிலையம் உள்ளது. ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறிஞ்சு கிணறு மேல் முதலை ஒன்று ‘ஹாயாக’ வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது.
ஆற்றில் குளிக்கச்சென்ற பொதுமக்கள் முதலையை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பொதுமக்கள் சத்தத்தைக்கேட்ட முதலை, மீண்டும் ஆற்று நீருக்குள் இறங்கி ‘உலா’ வந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
அமராவதி அணையில் உள்ள முதலைகள் நீர் திறக்கும் போது ஆற்றில் அடித்து வரப்படுகின்றன. பொதுமக்கள் குளிக்க மற்றும் துவைக்க அமராவதி ஆற்றுக்கு வரும் நிலையில் முதலை தாக்க வாய்ப்புள்ளது.
பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களும் தற்போது ஆற்றில் குளித்து வரும் நிலையில் மடத்துக்குளம் சுற்றுப்புற பகுதியிலுள்ள பொதுமக்கள் ஆற்றில் இறங்க முடியாத சூழல் உள்ளது.
எனவே உடனடியாக முதலையை பிடிக்க வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ஆற்றுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என வழியோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றனர்.
Next Story
×