என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெங்காய விலை வீழ்ச்சி
Byமாலை மலர்20 Jan 2022 8:57 AM GMT (Updated: 20 Jan 2022 8:57 AM GMT)
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்ததால் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒட்டன்சத்திரம்:
தென் தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழனி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினசரி 20 ஆயிரம் டன் வெங்காயம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.
மேலும் தாராபுரம், திருப்பூர், பல்லடம் பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயத்தை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையானது.
தற்போது வெளிமாவட்டத்தில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நல்ல விலை கிடைக்கும் என வெங்காயத்திற்கு பட்டறை அமைத்து பாதுகாத்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தற்போது 1 கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் புதிய சின்னவெங்காயம் ரூ.60க்கு மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். கடந்த மாதம் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி 1 கிலோ ரூ.100க்கு மேல் விற்பானையானது.
அப்போதும் விவசாயிகளுக்கு விலை கிடைக்கவில்லை. தற்போது விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் மேலும் நஷ்ட மடைந்துள்ளனர். தக்காளிக்கு விலை கிடைக்காததால் சில விவசாயிகள் சாலையில் வீசி சென்றனர். இந்த நிலையில் வெங்காய விலையும் குறைந்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எனவே அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதிக வரத்து காரணமாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், கேரளா மாநிலத்திற்கும் அதிக அளவு காய்கறிகள் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

Next Story
×