என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்20 Jan 2022 8:13 AM GMT (Updated: 20 Jan 2022 8:13 AM GMT)
தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி :
திருச்சி இ.பி.ரோட்டில் சமீப காலமாக அதிக அளவில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வருவதாக கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்து கொண்டே இருந்துள்ளது.
குறிப்பாக 10 நாட்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் தொடர்ச்சியாக 3 கடைகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை திருடிச் சென்றது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே கோட்டை போலீசார் இ.பி. ரோடு பகுதிகளில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஓயாமாரி சுடுகாடு அருகே கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது சிறுவர்கள் உள்பட 3 பேர் ஆள் நடமாட்டம் இல்லாத கடை ஒன்றின் முன்பக்க கதவை கடப்பாறையை பயன்படுத்தி உடைத்து கொண்டிருந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த போலீசார் உடனடியாக அந்த சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரனையில் அவர்கள் திருச்சி பாலக்கரை செங்குலம் காலனி இ.பி. ரோடு பகுதியைச் சேர்ந்த பரணிதரன் (வயது 22),சிவா (16)கண்ணன் (15) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள்தான் இ.பி. ரோட்டில் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக 3 பெட்டிக் கடைகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரிந்தது.
பின்னர் கோட்டை போலீசார் இதுகுறித்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×