என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவில் அருகே ரவுடி கொலை வழக்கில் கைதான மேலும் 3 பேர் ஜெயிலில் அடைப்பு
Byமாலை மலர்20 Jan 2022 7:33 AM GMT (Updated: 20 Jan 2022 7:33 AM GMT)
நாகர்கோவில் அருகே ரவுடி கொலை வழக்கில் கைதான மேலும் 3 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே குஞ்சன்விளை வைகுண்டர் வீதியை சேர்ந்தவர் தங்க கிருஷ்ணன் (வயது 43) டிரைவர். இவர் மீது கொலை மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் உள்ளது. சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது.
கடந்த 11-ந் தேதி குஞ்சன்விளை பகுதியில் தங்க கிருஷ்ணனை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து அவரது தந்தை சுந்தர மகாலிங்கம் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கலைநகரை சேர்ந்த சுதன், வல்லங்குமரன்விலை சேர்ந்த பிரவீன், குஞ்சன் விளை வைகுண்டர் வீதியை சேர்ந்த மணிகண்ட பிரபு, வட்டவிளையைச் சேர்ந்த விஷ்ணு ஆகிய 4 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் என்.ஜி.ஓ. காலனி காமராஜர் சாலையை சேர்ந்த ஜெகதீசன் (41), வண்ணான்விளையை சேர்ந்த மகேஷ் ராஜன்( 23), வட்டவிளையை சேர்ந்த முகேஷ் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஜெகதீசன் மகேஷ் ராஜன் முகேஷ் ஆகிய 3 பேரையும் நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×