search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேக்கம் அடைந்துள்ள தேங்காய்
    X
    தேக்கம் அடைந்துள்ள தேங்காய்

    கொரோனா ஊரடங்கால் விலை வீழ்ச்சி- 70 கோடி தேங்காய்கள் தேக்கம்

    கொரோனா ஊரடங்கால், 60 முதல் 70 கோடி தேங்காய் தேக்கம் அடைந்துள்ளது. இதன்மூலம், ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

    சேலம்:

    கொரோனா 3-வது அலை ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் பல்வேறு தொழில்கள் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா முதல் மற்றும் 2-வது அலையால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக முக்கிய தொழில்கள் பெரும் சரிவை சந்தித்தன.

    பின்பு ஊரடங்கு தளர்வுகள் காரணமாக தொழில்கள் புத்துயிர் பெற்றன. இயல்பு நிலை திரும்பிய நிலையில் தற்போது கொரோனா 3-வது அலை பரவலால் இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தொழில்துைறையை பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    தமிழகத்தில், நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாநிலம் முழுவதும், பல லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் தேங்காய் 600-க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகளில் இருந்து உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    குறிப்பாக, மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும், தமிழதகத்தில் சேலம், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. தினமும் மும்பைக்கு 80 லாரிகளிலும், மற்ற மாநிலங்களையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் சராசரியாக தினமும் 200 லோடு தேங்காய் அனுப்பி வைக்கப்பட்டது.

    தற்போது, கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் நடைசாத்தப்பட்டுள்ளது. அதனால், அதன் தேவை குறைந்து, விலை வீழ்ச்சியும் அடைந்துள்ளது. ஏற்கனவே பொங்கல் பண்டிகை சமயத்திலும், தைப்பூசத்தன்றும் கோவில் நடை அடைக்கப்பட்டிருந்தது.

    இதனால் தேங்காய் வரத்து குறைந்துள்ளதுடன், தேவை குறைவு காரணமாக அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, ரூ.9 முதல், ரூ.10-க்கு வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு தேங்காய், தற்போது ரூ.6.50 முதல் ரூ.7.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன், தமிழகத்தில் இருந்து 300 லோடு முதல் 400 லோடு வரை அனுப்பப்பட்டது. தற்போது 100 முதல் 150 லோடுகள் மட்டுமே அனுப்பப்படுகின்றன. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் மட்டுமே வரத்து குறைந்து, விலை அதிகரிக்கும். ஆனால் தற்போது, விலை சரிந்துள்ளது.

    இதுகுறித்து, தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க மாநில இணை செயலாளர் ஜெகநாதன் கூறுகையில், தமிழகத்தில் இருந்து, அறுவடை செய்யப்பட்ட தேங்காய்கள், தமிழகம் மட்டும் அல்லாமல், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் தேங்காய் அதிகளவில் உற்பத்தியாகும். ஆனால் தற்போதைய சூழலில் விலை மேலும் குறையும் என்ற அச்சம், தென்னை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கால், 60 முதல் 70 கோடி தேங்காய் தேக்கம் அடைந்துள்ளது. இதன்மூலம், ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×