என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காவடி எடுத்து பக்தர்கள்
  X
  காவடி எடுத்து பக்தர்கள்

  கோவை மருதமலை முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்
  கோவை:

  கொரோனா பரவல் காரணமாக  பொங்கல் பண்டிகையை யொட்டி பக்தர்கள் அதிகளவில் கூடிவிடக் கூடாது என்பதற்காக 5 நாட்கள் கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தைப்பூச நாளான நேற்றும்  முருகன் கோவில் களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

  இந்தநிலையில் 5 நாட்களுக்கு பிறகு இன்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள் திறக்கப் பட்டன. இதையடுத்து இன்று காலையில் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.  பொங்கல் பண்டிகையை யொட்டி சிறப்பு தரிசனம் செய்ய முடியாமல் இருந்த பக்தர்கள் இன்று காலையிலேயே வந்து நீண்ட வரி சையில் காத்திருந்து சாமி கும்பிட்டனர்.

  கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. 5 நாளுக்கு பிறகு இன்று மருதமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

   தைப்பூசத்துக்கு மாலை அணிந்து விரதமிருந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் இன்று மருதமலை முருகன் கோவிலில் திரண்டனர். ஒரு சில பக்தர்கள் நேற்று இரவிலேயே கோவிலுக்கு வந்து அடிவாரத்தில் தங்கியிருந்தனர்.

  அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று இரவு வந்து தங்கிய பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பால்குடம் மற்றும் காவடி எடுத்து மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்

  . இன்று காலையும் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றார். இதனால் அந்த பகுதியே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
  Next Story
  ×