என் மலர்
உள்ளூர் செய்திகள்

துரை வைகோ
தமிழக கலாசாரத்தை மத்திய அரசு அழிப்பதாக துரை வைகோ குற்றச்சாட்டு
தமிழக கலாசாரத்தை மத்திய அரசு அழிக்கிறது என்று துரை வைகோ மதுரையில் பேட்டி அளித்தார்.
மதுரை
ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ இன்று காலை மதுரை வந்தார். அவர் திருமலை நாயக்கர் பிறந்தநாளையொட்டி பேலஸ் ரோட்டிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில் திருமலை நாயக்கர் மதுரை மாநகரின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டவர். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களின் ஒற்றுமைக்கு வழிவகுத்தவர். அவருக்கு இந்த நேரத்தில் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்வது பெருமையாக உள்ளது.
குடியரசுதின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழக வாகனங்களுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இருப்பது துரதிஷ்டவசமானது. தமிழக கலாச்சார, பண்பாடு, வரலாற்று நிகழ்வுகளை மத்திய அரசு அழிக்க பார்க்கிறது. அவர்கள் இந்த நிலைபாட்டை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து துரை வைகோ மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள திருமலை நாயக்கர் உருவச்சிலைக்கும் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
Next Story