search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    திருச்சி மாவட்ட அளவிலான ஈரநில விழா போட்டிகள்

    தமிழ்நாடு வனத்துறை சார்பில் திருச்சி மாவட்ட அளவிலான ஈரநில விழா போட்டிக்கு மாணவர்கள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

    திருச்சி:

    திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலர் ஜி.கிரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு வனத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 2- ஆம் தேதி அன்று ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதே போல் திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான ஈர நில விழா, சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலரும், தமிழ்நாடு மாநில ஈர நில ஆணையரின் அறிவுறுத்தலின்படியும் திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலரின் வழிகாட்டுதலின்படியும் ஈர நிலம் தொடர்பான போட்டோ தொகுப்புகள் 18.01.2022 முதல் 24.01.2022 வரை இணையதளம் மூலம் திருச்சி  மாவட்ட அளவில் நடைபெறவுள்ளது.


    எனவே மேற்கண்ட போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஈர நில நண்பர்கள் மற்றும் ஏனையர்கள் அனைவரும் கலந்து கொண்டு  இணைதளத்தில் தங்களது பதிவுகளை 24.01.2022 மாலை 5.00 மணிக்கு முன்பாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையிலான தணிக்கை குழுவால் தேர்வு செய்யப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×