என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  X
  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  நாகை அருகே பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமருகல் அருகே பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பாதுகாக்க கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தினர்
  நாகப்பட்டினம்:

  நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் பி.எஸ்.என்.எல் பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

  ஒன்றிய தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கட்டுமாவடி, புறாக்கிராமம், துறையூர், வாழ்மங்கலம், எரவாஞ்சேரி, சியாத்தமங்கை, தேவங்குடி உள்ளிட்ட 6 கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

   இதில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் உள்ளது போல் 4ஜி, 5ஜி அலைக்கற்றைகளை உருவாக்கி நிறுவனத்தையும், ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

  Next Story
  ×