என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  அம்பை அருகே பெட்டிக்கடையில் புகையிலை விற்ற வியாபாரி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை அம்பை அருகே பெட்டிக்கடையில் பதுக்கி விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
  நெல்லை:

  அம்பை திலகர்புரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 43). இவர் அம்பை பஜாரில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

  இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதைத்தொடர்ந்து நேற்று போலீசார் அவரது கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

  அப்போது அங்கு ரூ.1,300 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×