என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆழித்தேரோட்ட பந்தக்கால் நிகழ்ச்சி.
தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டத்தை ஒட்டி பந்தக்கால் முகூர்த்தம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தை ஒட்டி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் மிகவும் பிரசித்தி
பெற்றதாகும்.
உலகப் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே பெரிய தேரான
தியாகராஜர் கோவில் ஆழித்தேரானது லட்சக்கணக்கான பக்தர்கள்
வடம் பிடித்து இழுக்க நான்கு வீதிகளிலும் ஓடி வருவதை காண
கண்கோடி வேண்டும் என்பர்.
96 அடி உயரத்தில் இந்த தேர் வீதிகளில் அசைந்து ஆடி வருவது
பார்ப்பவரின் மனதை கொள்ளை கொள்ளும்.
இந்த திருவாரூர் தியாகராஜர் தேர் இந்த ஆண்டு மார்ச் 15-ந்தேதி
நடத்த தேதி குறிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேர் கட்டுமான பணிகளை தொடங்குவதில் அறநிலையத்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஆழி தேரோட்டத்திற்கு தேர் கட்டும் பணிக்காக நேற்று பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டது.
சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க விசேஷ பூஜைகளுடன் பந்த கால் முகூர்த்தம் நடைபெற்றது. நிகழ்ச்சியில்
கோயில் நிர்வாக அதிகாரி கவிதா உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கண்ணாடி கூண்டில் மூடி வைக்கப்பட்டுள்ள தேர் விரைவில்
பிரிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும் என
அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுபோல் தேரோட்டத்தின் ஒரு பகுதியாக முருகன், பிள்ளையார்,
அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தேரோட்டமும் நடைபெறும்.
இந்த தேரோட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக பிள்ளையார் தேர்
செய்யப்பட்டு வருகிறது.
திருவாரூர் ஸ்தபதி இளவரசன் தலைமையில் புதிய தேர் செய்யும்
பணிகள் நடைபெற்று வருகின்றன. 18 அடி உயரம் கொண்ட இந்த
புதிய தேர் பீடம், ரூ.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த தேர் கட்டி முடிக்கப்பட்டு ஆழித் தேரோட்டத்துடன் புதிய
பிள்ளையார் தேரும் பங்கேற்கும்.
திருவாரூர் தேரோட்டம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறுவது
சிறப்பானது என பக்தர்கள் தெரிவித்துவரும் நிலையில், இந்த
ஆண்டும் ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story