என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  கொரோனா தொற்றால் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டவர்களை குழு அமைத்து தீவிர கண்காணிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தொற்றால் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டவர்களை குழு அமைத்து சுகாதாரதுறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
  சேலம்:

   சேலம் மாவட்டத்தில் தற்போது தொற்று பரவல் 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 3-வது அலையில்   இதுவரை  3  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்னர்.  இவர்களில்  1500-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகின்றனர்.

  வீடுகளில் சிகிச்சை பெறுவோரை கண்காணிக்க சுகாதார துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

   இந்த குழுவினர்  வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள்  வீட்டில்    இருந்து வெளியில் செல்லாமல் இருக்கவும், அவர்களின்  உடல் நிலையை  தொடர்ந்து கண்காணிக்கவும்,  நியமிக்கப்பட்டுள்ளனர்.

  மேலும்  வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றி திரிந்தால் எச்சரிக்கை   விடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில்  தீவிரமாக    ஈடுபட்டு வருகிறார்கள்.
  Next Story
  ×