என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  ஆன்லைன் வகுப்பு - மாணவர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, சில அரசுப் பள்ளிகளில்100 மதிப்பெண்களை உள்ளடக்கிய அலகுத்தேர்வு நடத்தப்பட்டது.
  உடுமலை:

  அரசு உத்தரவுப்படி உடுமலை கல்வி மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 31-ந்தேதி வரை நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் இனிவரும் நாட்களில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு‘ஆன்லைன்’ வகுப்பு துவக்கினாலும் அவர்களை ஒருங்கிணைக்க முடியாது என பள்ளித்தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, சில அரசுப்பள்ளிகளில் 100 மதிப்பெண்களை உள்ளடக்கிய அலகுத்தேர்வு நடத்தப்பட்டது. பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பட்டும் 75 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆர்வம் காட்டினர்.

  தற்போதைய சூழலில் திருப்புதல் தேர்வும் தடைபட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் அவர்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகள் துவக்கினாலும் அவர்களை ஒருங்கிணைக்க முடியாது.

  நடப்பு கல்வியாண்டும் அரசால் ‘ஆல்பாஸ்’ அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கின்றனர். இதேநிலை தொடர்ந்தால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து அடிப்படை அறிவைக்கூட அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
  Next Story
  ×