என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம்- வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
  திருச்செந்தூர்:

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் அருள்பாண்டி(வயது 22). தொழிலாளி.

  இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக திருச்செந்தூர் வந்தார்.

  அப்போது அவருக்கும், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10-ந்தேதி மாணவி பள்ளி சென்ற நிலையில் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

  இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை தேடி சென்றனர். அப்போது அருள்பாண்டி மாணவியை ஆசைவார்த்தை கூறி கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

  இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் கேரளா விரைந்து சென்று மாணவியை மீட்டனர்.

  விசாரணையில் அருள் பாண்டி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அருள் பாண்டியை கைது செய்தனர்.

  Next Story
  ×