என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கி வீரமணி
  X
  கி வீரமணி

  கி.வீரமணிக்கு 2வது முறையாக கொரோனா- ஆஸ்பத்திரியில் அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  சென்னை:

  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி (வயது 88). சமீபத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

  இதற்கிடையே கடந்த சில நாட்களாக கி.வீரமணிக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறி மீண்டும் ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் வந்தது. இதில் அவருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
  Next Story
  ×