என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு புகைப்படம்
  X
  கோப்பு புகைப்படம்

  கொரோனா நோயாளிகள் தவறான தொலைபேசி எண்களை தருகின்றனர்- சென்னை மாநகராட்சி அதிகாரிகள் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தினமும் 40 எண்கள் போலியானதாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  சென்னை:

  தமிழகம் முழுவதும் 23,000 பேருக்கும் அதிகமாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

  சென்னையில் நேற்று ஒரே நாளில் 8591 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் கொரோனா அறிகுறி உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சென்னை மாநகராட்சி தீவிர கவனம் செலுத்து வருகிறது.

  இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தவறான தொலைபேசி எண்களை தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

  தினமும் 40 எண்கள் போலியானதாகவும், தவறானதாகவும் இருப்பதாகவும். அவர்களை தொடர்புகொண்டால் சரியான தகவல்கள் கிடைப்பதில்லை அல்லது போன் அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  இதையடுத்து தவறான தகவல் வழங்குவோர் மீது காவல்துறையில் புகார் அளிக்க ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  Next Story
  ×