என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  பேரையூர் அருகே விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரையூர் அருகே விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பேரையூர்:

  பேரையூர் அருகே உள்ள பெரிய சிட்டுலொட்டியை சேர்ந்தவர் ராஜா கனி(வயது 48), இவர் அதே ஊரில் பம்ப் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். ராஜாகனி குடிப்பழக்கத்துக்கு ஆளாகி அடிக்கடி குடும்பத்தினருடன் சண்டை போட்டு வந்தாராம். இந்த நிலையில் ராஜகனி கே.மீனாட்சிபுரத்தில் உள்ள நாடக மேடை அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். உடனே சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே ராஜாகனி இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×