search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்.
    X
    திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்.

    திருப்பரங்குன்றம் கோவில் முன்பு பக்தர்கள் வழிபாடு

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டனர்.
    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடு என பெருமை கொண்டது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 

    இந்த திருவிழாவில் சுப்பிரமணியசுவாமி தெய்வானை, முத்துக்குமாரசுவாமி தெய்வானை என 2 முருகன், 2 தெய்வானை புறப்பாடாகி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். 

    இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று கொரோனா கட்டுப்பாடுகளுடன் உள்திருவிழாவாக நடந்தது.  

    இதையடுத்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பால்காவடி, பன்னீர்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்து வந்த பக்தர்கள் கோவில் வாசலிலேயே நின்று சூடம் ஏற்றி வழிபட்டனர்.  மேலும் பக்தர்கள் கொண்டு வந்த மாலைகளை கோவில் வாசலிலேயே வைத்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். 

    விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் இன்று மாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, முத்துக்குமாரசுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிம்மாசனத்தில் எழுந்தருளி கோவில் திருவாசி மண்டபத்தில் 3 முறை சுற்றி வந்து அருள்பாலிப்பார்.

    முன்னதாக திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள பழனியாண்டவர்கோவிலில் உள்ள பழனியாண்டவருக்கு காலையில் சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச நாளில் கோவில் அடைக்கப்பட்டது பக்தர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×