என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  வெங்கல் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்- 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கல் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரியபாளையம்:

  வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வெங்கல்-சீத்தஞ்சேரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது அதில் வந்த 2 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது 1½ கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

  விசாரணையில் அவர்கள் திருநின்றவூர், கன்னட பாளையத்தை சேர்ந்த சுரேஷ்பாபு, பாகல்மேடு பெரிய காலனியை சேர்ந்த செந்தர்ராஜன் என்பது தெரியவந்தது.

  அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஆட்டோ, மோட்டார் சைக்கிள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சுரேஷ்பாபு, செந்தர்ராஜன் ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×