என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  தொழிலாளர்களின் யு.ஏ.என். பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனைத்து தொழிலாளர்களும் தனது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை பதிவு செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
  சேலம்:


  சேலம் இ.எஸ்.ஐ.சி. துணை மண்டலத்தின் கீழ் வரும் அனைத்து தொழிற் சாலைகள், நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் யு.ஏ.என். (யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்) என்ற 12 இலக்க எண்ணை கேட்டுப் பெற்று அதை இ.எஸ்.ஐ. கழகத்தின் அலுவலக இணைய தளமான www.esic.in என்ற தளத்தில் சென்று தங்களுக்கென ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள யூசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு கொண்டு உள் நுழைந்து அனைத்து தொழிலாளிகளின் யு.ஏ.என். விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  மேலும் தங்களின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் யு.ஏ.என்.-ஐ ஒரே நேரத்தில் எக்சல் மூலம் மொத்தமாகவும் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. அனைத்து தொழில் அதிபர்களும் இந்த பதிவேற்றத்தை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
   
  இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×