என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செயின் பறிக்க முயன்ற வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்திருந்த காட்சி.
  X
  செயின் பறிக்க முயன்ற வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்திருந்த காட்சி.

  பெண்ணிடம் செயின் பறித்த வாலிபரை கம்பத்தில் கட்டி அடி-உதை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாட்டறம்பள்ளி அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த வாலிபரை கம்பத்தில் கட்டி பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
  ஜோலார்பேட்டை:

  நாட்டறம்பள்ளி அருகே வாணியம்பாடி  கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கேத்தாண்டப்பட்டி அருகே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி பகுதியை  சேர்ந்தவர்  சுரேஷ்.

  இவரது மனைவி மயூரி தம்பதியினருக்கு 2  குழந்தைகள் உள்ளனர். இவர்கள்  வாணியம்பாடியில் இருந்து ஓசூர் நோக்கி நேற்று மாலை பைக்கில் சென்று கொண்டிருந்தனர். 

  அப்போது  இவர்கள் பின்னால் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

  பைக்கில் இருந்த ஒரு நபர் மயூரி கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றான். சுதாரித்து கொண்ட மயூரி செயினை பிடித்து கொண்டார்.

  இதில் நிலை தடுமாறி 2 தரப்பினரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். மயூரி படுகாயம் அடைந்தார்.

  அப்போது வாலிபர் ஒருவர் பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மற்றொரு வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். 

  இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரிடம விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் பிரசாந்த் என தெரியவந்தது. மேலும் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×