என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  லாரி டிரைவரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரிப்பட்டி அருகே லாரி டிரைவரை கத்தியால் குத்தி பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார்தேடி வருகிறார்கள்.
  சேலம்:

  சேலம் மாவட்டம் தலைவாசல் மேற்கு தெருவை சேர்த்த பழனிவேல்முருகன் (வயது 37). டேங்கர் லாரி டிரைவர். இவர் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டியை அடுத்த ராமலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கினார்.

  அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் தண்ணீர் கேட்பது போல லாரி டிரைவரிடம் பேச்சு கொடுத்தனர். பின்பு திடீரென பழனிவேல் முருகனை கத்தியால் குத்தி அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மற்றும்  செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

  இதில் காயம் அடைந்த பழனி வேல்முருகன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு  திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×