என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  ஏர்ஹாரன்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு பஸ்களில் கூட அதிக சத்தம் எழுப்பும் ‘ஹாரன்’ பயன்படுத்துகின்றனர்.
  உடுமலை:

  கனரக வாகனங்களில் 70 டெசிபல் என்ற அளவில் மட்டுமே ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்த வேண்டுமென விதிமுறை உள்ளது. ஆனால்  உடுமலை மார்க்கமாக இயக்கப்படும் கோவை &- பழநி இடையிலான சில அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் கூடிய ஏர்ஹாரன் ஒலிக்கப்படுகிறது.

  இதனால் பிற வாகன ஓட்டுனர்கள்  நிலை தடுமாறி பிற வாகனத்தின் மீது மோதி விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.அதேநேரம் நகர்ப்புறங்களில் பஸ்சை இயக்கும்போது மட்டும் குறைந்த டெசிபல் அளவில் மாற்று ஹாரன் ஒலிக்கப்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து போலீசார் ஆகியோர் 'ஏர்-ஹாரன்' பயன்பாட்டை  கண்டறிந்து பறிமுதல் செய்ய வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இது குறித்து வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், அரசு பஸ்களில் கூட  அதிக சத்தம் எழுப்பும் 'ஹாரன்' பயன்படுத்துகின்றனர். இதனால்  பயணிகள் வெகுவாக பாதிக்கின்றனர்.நிரந்தர தீர்வாக 90 'டெசிபலுக்கு' மேல் ஒலிக்கும் 'ஹாரன்'களை அகற்றுவதோடு சம்பந்தப்பட்ட டிரைவர், வாகன உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
  Next Story
  ×