என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
தம்மம்பட்டி அருகே கொடிய விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலி
தம்மம்பட்டி அருகே விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலியானான்.
சேலம்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி விவேகானந்தர் தெருவை சேர்ந்த மருதை மகன் சந்த்ரு(வயது11). இவன் லில்லாங்குளம் பகுதியில் உள்ள தோட்டத்தில் விளையாடினான்.
அப்போது அவனை விஷப்பூச்சி கடைத்தது. இதனால் அலறிய சந்த்ருவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.
பின்பு அவன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சந்த்ரு சிகிச்சை பலனின்றி இறந்தான்.
சிறுவன் சந்த்ருவை கடித்தது கொடியவகையிலான இதயத்தை தாக்கும் விஷப்பூச்சி என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.
Next Story