என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வெற்றி பெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.
  X
  வெற்றி பெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

  வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி வினாடி-வினா மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
  உடுமலை:

  உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பாக சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி வினாடி-வினா மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. 

  இணையவழி வினாடி வினா போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து 600-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பதில் அளித்தனர். அதில் முதல் 3 இடங்களைப் பிடித்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட உள்ளது. 

  1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியில் முதலிடம் பெற்ற உடுமலை சீனிவாசா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 4-ம் வகுப்பு மாணவர் சபரிராஜாவுக்கு பரிசும் சான்றிதழும் உடுமலை காந்தி நகரில் உள்ள கலிலியோ அறிவியல் கழக மையத்தில் வழங்கப்பட்டது.

  பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் ,கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் மற்றும் செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் பரிசினையும் சான்றிதழையும் வழங்கினர்.  
  Next Story
  ×