என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கோவையில் வெள்ளி விநாயகர் சிலை திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வீட்டின் பூட்டை உடைத்து விநாயகர் சிலை பணம் திருடப்பட்டது.
  கோவை:
   
  கோவை ஆலந்துறை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி  (வயது 61). இவர் தனது தாயார் பழனியம்மாளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 11-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது தாயாரை அழைத்து கொண்டு ஆவாரம்பாளையத்தில் உள்ள மற்றொரு வீட்டுக்கு பொங்கல் விழா கொண்டாட சென்றனர்.

  அப்போது அந்த வழியாக வந்த லட்சுமியின்  உறவினர்  பெருமாள்  என்பவர்  லட்சுமியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார். உடனே அவர் லட்சுமிக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். இதைகேட்ட அவர் உடனே வீடு திரும்பினார். 

  வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பணம் ரூ.5 ஆயிரம், வெள்ளி விநாயகர் சிலை மற்றும் டி.வி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

  இதையடுத்து  லட்சுமி ஆலந்துறை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட் டுள்ள சி.சி.டி.வி காமிராக் களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து  கொள்ளையடித்த கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×