search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்கப்பட்ட காடசி.
    X
    முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்கப்பட்ட காடசி.

    நெல்லையில் இன்று 602 பேருக்கு கொரோனா

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று 331 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று புதிதாக 602 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று 331 பேர் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று புதிதாக 602 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் அடங்குவர். 

    இதுதவிர நர்சுகள், மாநகர போலீசார், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    அதிகபட்சமாக மாநகராட்சி பகுதியில் 235 பேரும் அம்பையில் 93 பேரும், வள்ளியூரில் 75 பேரும், ராதாபுரத்தில் 61 பேரும், பாளையில் 36 பேரும், களக்காட்டில் 31 பேரும், சேரன்மகாதேவியில் 25 பேரும், நாங்குநேரியில் 18 பேரும், மானூரில் 16 பேரும், பாப்பாக்குடியில் 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இதில் பெரும்பாலோனர்களுக்கு லேசான அறிகுறி இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சிலருக்கு தொற்று வேகமாக இருப்பதால் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு துப்பரவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது. தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மாநகராட்சி சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    வெளியூரில் இருந்து வருபவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர்.

    பெரும்பாலான இடங்களில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவையும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×