என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கோவை அருகே மொபட்டை எரிக்க முயன்ற பா.ஜனதா நிர்வாகி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மொபட்டுக்கு தீவைக்க முயன்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  கோவை:

  கோவை சூலூர் ஜல்லிப்பட்டி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47). டிரைவர். மேலும் இவர் தி.மு.க நிர்வாகியாக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவர் கோவை வடக்கு பா.ஜனதா இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார்.

  இந்த நிலையில் நேற்று விஜயகுமார் ஜல்லிப்பட்டி பகுதியல் மொபட்டில் சென்றார். அப்போது அங்கிருந்த செல்வகுமார் குடிபோதையில் திடீரென அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  அப்போது ஆத்திரமடைந்த செல்வக்குமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுப்பட்டார்.

  பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்தார். அதனை விஜயகுமார் மொபட் மீது ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

  இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். பலத்த காயமடைந்த விஜயகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

  இதுகுறித்து விஜயகுமார் சுல்தான் பேட்டை போலீசில் புகார் தெரிவித்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா இளைஞரணி துணைச் செயலாளர்  செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  Next Story
  ×